கலை தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது- ஐகோர்ட் கிளை வேதனை!!

கலை பற்றி தெரியாதவர்களுக்கெல்லாம் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சமுத்திரம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்குதல் செய்தார் அதில் 2021 ம் ஆண்டு தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி விருது வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார்.

பிரியா மரணம்! மருத்துவர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

இந்தமனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விருதுகளுக்கான மரியாதை இல்லாமல் போய்விட்டது என வேதனை தெரிவித்தனர்.

கலைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இரண்டு படங்களில் நடித்தாலே விருது வழங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் இயல் இசை நாடக மன்றத்தை கலைக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.

சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!!

அதே போல் 2021ல் வழங்கப்பட்ட விருது குறித்தும் 2022ல் வழங்கப்படவுள்ள விருதுகள் குறித்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் தமிழக இயல் இசை நாடக மன்ற தலைவர் உறுப்பினர் மற்றும் செயலர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவு பிறக்கபிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.