மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறப்பு !

மதுரை புதுநத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் செலவில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில், கட்டடத்துக்கு ரூ.99 கோடியும், புத்தகங்களுக்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்களுக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டி முடிக்கப்பட்டு ஜூன் 3-ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

கலைஞர் நூலகம் 2.13 லட்சம் சதுர அடியில் 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்படும். கடந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தகங்கள், இருக்கை மற்றும் படிக்கும் வசதி, தரை தளத்தில் 250 இருக்கைகள் கொண்ட திரையரங்கம் ஆகியவை இருக்கும்.

முதல் தளத்தில் சிறுவர் நூலகமும், நாளிதழ், வார, மாத இதழ்களும், 2வது தளத்தில் கருணாநிதி கலைஞரின் நினைவாக கவிதை, கட்டுரை, அரசியல், இலக்கியம், வரலாற்று நூல்கள் அடங்கிய புத்தகங்களும் உள்ளன. .

மேலும் தற்போது 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் அனைத்து புத்தகங்களும் தயாரான பிறகு கட்டிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும். இது உலகத்தரம் வாய்ந்த நூலகம்” ஆக அமையும்.

இலங்கையை சேர்ந்த இரண்டு குடும்பம் தனுஷ்கோடியில் அடைக்கலம் !

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகப் பணிகள் விரைவில் முடிவடைந்து ஜூன் 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.