பத்து ஆண்டுகளுக்குப் பின்பு மக்களின் ஆதரவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது திராவிட முன்னேற்ற கழகம். திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்த வாக்குறுதிகளில் பலவற்றையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு மக்களிடையே பெரும் நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது.
அவ்வப்போது விமர்சனங்கள் மத்தியில் சிக்கினாலும் முதலமைச்சர் ஸ்டாலின் திறம்பட அதனை கையாண்டு மேற்கொண்டு வருகிறார். மேலும் புதிய பல திட்டங்களையும் முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வேலைவாய்ப்பின்மையையும் குறைத்துக் கொண்டு வருவது தெரிகிறது.
இந்த நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை ஒன்றாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அதன் முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பிப்ரவரி 1, 2 ஆகிய இரண்டு தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வில் இறங்க உள்ளார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் அரசின் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து கொண்டு வருகிறார்.
கள ஆய்வில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் திட்ட செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி இரண்டாம் தேதி ஆட்சியாளர்களுடன் விவரிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் ஆய்வுக்கூடத்தில் தலைமைச் செயலர், துறைச் செயலர்கள், ஆட்சியர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு பற்றி முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.