திரையுலகின் முன்னணி நடிகையான வளம் வரும் காஜல் அகர்வால் தற்போழுது இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார்.மேலும் படத்திற்கான பயிற்சியில் பிஸியாக இருக்கிறார். தற்காப்புக் கலையான களரிபயட்டுக்கான தீவிரப் பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார், போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கலைகளில் இதுவும் ஒன்று.
இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவை 2 வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சமீபத்தில் தனது 37 வது பிறந்தநாளில், காஜல் மகன் நீலுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், மேலும் தனது மகனான நீலுடன் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வருகிறார்.
இந்நிலையில் காஜல் தற்போழுது இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக திருப்பதியில் உள்ளார். இன்று காலை காஜல் அகர்வாலும் அவரது கணவர் கவுதம் கிச்லுவுடன் திருப்பதி சாமி தரிசனம் செய்துள்ளார். திருப்பதி பெருமாளை தரிசித்த காஜல் அங்குள்ள முன்னை பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.
சூர்யா 42 படத்திற்கு வந்த சோதனை காலமா இது? எச்சரிக்கை கொடுத்த படக்குழு!
எந்த வித மேக்கப்பும் இல்லாமல் கணவருடன் எளிமையாக இருக்கும் காஜல் ஜோடியாக இருக்கும் வீடியோ தற்போழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.