Connect with us

உடல் கேலி பதிவுகளுக்கு காஜல் ‘ நெத்தியடி’ பதிவு…

201905302356599875 Kajal Aggarwal film Rs 8 crore loss SECVPF 2

Entertainment

உடல் கேலி பதிவுகளுக்கு காஜல் ‘ நெத்தியடி’ பதிவு…

உடல் கேலி பதிவுகளுக்கு காஜல் ‘ நெத்தியடி’ பதிவு…

தமிழ், தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில்  பழனி படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, கார்த்திக் ஆகியோருடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அவர் பகிர்ந்த அந்த புகைப்படத்தை சிலர் உருவ கேலி செய்து பதிவிட்டு வந்தனர்.

இது தொடர்பாக நடிகை காஜல் அகர்வால் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் அற்புதமான புதிய மாற்றங்களை சமீப காலமாக நான் சந்தித்து வருகிறேன்.

மேலும், குறிப்பிட்ட சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள் எதற்கும் உதவாது. அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், வாழு, வாழவிடு” என கருத்தை சோசியல்  மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top