
பொழுதுபோக்கு
இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் காஜல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கமலின் மிரட்டலான நடிப்பை மீண்டும் பார்த்து ரசிகர்கள், அடுத்ததாக கமலின் இந்தியன் 2 படம் குறித்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.
விக்ரம் படத்திற்கு முன்பாகவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சில விபத்து மற்றும் கொரோனா தாக்கம் என ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலையே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கமலஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த காஜல் தானே மீண்டும் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
நடிகை காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு மும்பை தொழில் அதிபர் கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போழுது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை அடுத்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் காஜல் அகர்வால் நடிக்க விரும்புவதாக அவே தரப்பில் கூறப்படுகிறது.
நித்தியானந்தாவாக மாறிய ரோபோ ஷங்கர்! செம கெட்டப் தான்னு கமண்ட் வேற..
ஆனால் இது குறித்து படக்குழு இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை .மேலும் ஷங்கர் தற்போழுது இயக்கி வரும் ராம்சரணின் RC15 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதனால் இந்தியன் 2 படத்தையும், ராம்சரண் படத்தையும் சேர்த்து ஒரே நேரத்தில் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
கமல் ரசிகர்களுக்கு தற்போது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
