தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று வந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும், அவர் தற்போது சிரஞ்சீவியின் ஆச்சாரியா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இயக்குனர் கல்யாண் இயக்கவுள்ள படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள உள்ளார்
இந்த நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவந்த ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் காஜல் அகர்வால் நடித்து வந்தார். இந்த தொடரில் வைபவ், கயல் ஆனந்தி உள்பட பலர் நடித்து வந்தனர்.
இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த தொடர் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரி 12 முதல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு பின்னர் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதால் இந்த வெப்தொடரை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்