கொள்ளை அழகுடன் வெளியான காஜல் அகர்வாலின் ஹே சினாமிகா பர்ஸ்ட் லுக்…!

கோலிவுட்டில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் காஜலுக்கு நல்ல மார்க்கெட் நிலவி வந்தது. தமிழில் இறுதியாக காஜல் நடிப்பில் வெளியான கோமாளி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 ஹே சினாமிகா

அதேபோல் காஜல் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை காஜல் திடீரென தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என காஜல் கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை இவருக்கு தமிழில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. அதேபோல் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் காஜல் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படமான ஹே சினாமிகா படத்தில் காஜல் அகர்வாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறாராம். ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக அதிதி ராவ் நடிக்கிறார்.

துல்கர் சல்மானின் 33வது படமாக உருவாகும் இந்த படத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் டிவியும் கைப்பற்றி உள்ளதாம். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 25 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment