பிறந்த ஒரே நாளில் குழந்தைக்கு பெயர் வைத்த காஜல் அகர்வால் !!
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இதனையடுத்து தமிழ் சினிமாக்களில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்திக் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சினிமா துறையில் ஸ்டாராக திகழ்ந்து வந்த காஜல் அகர்வால் கடந்த 2020- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
சோசியம் மீடிவாவில் ஆக்டிவ்வாக இருக்கும் காஜலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சிலு, தனது குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
