Entertainment
மன்சூரின் கடமான் பாறைக்கு ஏ சான்றிதல்
நடிகர் மன்சூர் அலிகான், தனது ‘கடமான் பாறை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டிருக்கிறார் “நான் என்ன எதிர்பார்த்தேனோ அதுவே கிடைத்துவிட்டது” என்று கூறுகிறார் மன்சூர் அலிகான் .

இந்தப் படத்தில் தனது மகன் அலிகான் துக்ளக்கை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
மன்சூர் அலிகான் நீண்டகாலம் கழித்து இயக்கும் படம் என்பதால் மன்சூர் அலிகானின் முந்தைய படங்கள் பார்க்கும் தரத்தில் இருந்ததாலும் இந்த படத்தையும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கடமான் பாறை என்ற பகுதிக்கு சுற்றுலா வரும் காதல் ஜோடி, அந்தப்பகுதியில் வசிக்கும் காட்டின் மைந்தர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு தப்பிப்பதுதான் இந்தப் படத்தின் கதையாம்.
படத்தில் அதிகமான க்ளாமர் காட்சிகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
