Entertainment
மூன்றே நாளில் கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போத் அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்றா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் இம்மாதம் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவல் கார்த்தியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க கிராமிய மணத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இமான், கிராமிய இசையமைப்பதில் வல்லவர் என்பது தெரிந்ததேஎ
இந்த படத்தை தயாரித்துள்ள சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இன்னும் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
