கடகம் தை மாத ராசி பலன் 2023!

குடும்பத்தில் பண வரவு சார்ந்து தட்டுப்பாடு ஏற்படும். எந்தவொரு செயலைச் செய்யும் முன்னும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் நல்லது.

பேசும்போது கோபத்தைக் குறைக்காவிட்டால் சனி பகவானின் பார்வையால் பெரும் பிரச்சினைக்கு இட்டுச் செல்லும். எந்தவொரு தவறுக்கும் தயங்காமல் மன்னிப்புக் கேட்டு விடுவது நல்லது.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் சிக்கல்கள் அதிகரிக்கும். மேலும் பிள்ளைகள் செய்யும் விஷயங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவது நல்லது.

குழந்தைகள் கல்விரீதியாக சிறப்பாகச் செயல்படுவர். மாணவர்களிடம் நற்பெயரைப் பெற்றுத் தரும் வகையிலான மாற்றத்தினைக் காண்பீர்கள். குடும்பத்தில் மாமியார் மற்றும் நாத்தனாரால் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். இருப்பினும் சுப செலவுகளைச் செய்ய பணத் தட்டுப்பாடு இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் எந்தவொரு குறைபாடும் இருக்காது. ஆனால் சனி பகவான் 5 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்வதால் வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

தொழில்ரீதியாக வியாபாரிகளுக்கு அலைச்சல் மிகுந்த மாதமாக இருக்கும். குரு பார்வை இருப்பதால் தலைக்கு வரும் பிரச்சினை தலைப்பாகையோடு மறைந்து போகும்.

தொழில் கூட்டாளர்கள் உங்களுக்குப் போட்டியாளர்கள் ஆவார்கள். அறிவுப்பூர்வமாகச் செயல்பட்டு பல பிரச்சினைகளைத் தவிர்ப்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.