கடகம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

கடக ராசியினைப் பொறுத்தவரை அஷ்டமச் சனியாக சனி பகவான் உள்ளே நுழைந்துள்ளார். சனி பகவான் 8 ஆம் இடத்தில் வலுவாக அமர்ந்துள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இடமாற்றம், வேலை மாற்றம் என ஆதாயம் நிறைந்ததாக இருக்கும். தொழில்ரீதியாக ஏற்றங்கள், இறக்கங்கள் நிறைந்த மாதமாக இருக்கும்; ஆனால் பணவரவு சீராக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக சோம்பல்கள் நிறைந்து இருந்தவர்களும், தற்போது சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவர்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை தங்க நகைகளில் முதலீடு செய்து மகிழ்வீர்கள். கடன் தொந்தரவுகள் கட்டுக்குள் இருக்கும் காலகட்டமாக இருக்கும். கொடுத்த வாக்கினை கஷ்டப்பட்டுக் காப்பாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அதனால் வாக்குக் கொடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாக்குக் கொடுத்தல் நல்லது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்கள், தாமதங்கள் ஏற்படும். மிகப் பெரும் முயற்சிக்குப் பின்னரே வரன் அமையும். எதிரிகள் குறைவர், வீட்டினைப் புதுப்பிக்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். செய்யும் அனைத்து விஷயங்களிலும் கவனத்துடன் இருத்தல் நல்லது.

உடல் நலன் ரீதியாக குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதிப்புகள் ஏற்படும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் பெரிதாகும்; பிரியும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். நிதானித்து பொறுமையுடன் செயல்படுதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews