கடகம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

கடகம் சுபகிருது வருட பலன்கள்

அனைவர் மீதும் அன்பு செலுத்தும் கடகம் ராசி அன்பர்களுக்கு சுமாரான ஆண்டாக இருக்கும். பொருளாதார நிலை ஓரளவு மேம்படும், மேலும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள மன தைரியம் தேவை.

பிறரின் ஜாமீன் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது, கடன் கொடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். சக பணியாளர்களால் வேலை சார்ந்த விஷயங்களில் நன்மைகள் ஏற்படும்.

வீடு, மனை சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டாம். குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருதல் வேண்டும். கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது, தொழில் ரீதியாக மந்தநிலை ஏற்படும். தொழில் அபிவிருத்தியை இந்த ஆண்டு செய்யாமல் இருப்பது நல்லது.

இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இடம் பெயர்தலோ, அல்லது ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு மாறாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் பெருமாள் கோவிலுக்குச் சென்று மாலை, பூ சாத்தி நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

பெற்றோர் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. மேலும் பெற்றோரின் மருத்துவ ரீதியாக அதிக செலவுகளைச் சந்திப்பீர்கள். திருமண சார்ந்த விஷயங்களில் வரன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

தொழில் ரீதியாக முதலாளியுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு, தொழில் கூட்டாளர்களால் தொழில் சார்ந்த பிரச்சினையினை சந்திப்பீர்கள். உயர் பதவிகள் தட்டிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.