கடகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022!

கடக ராசியின் குரு பகவான் 9 ஆம் இடத்தில் வக்கிரமடைந்தும், சனி பகவான் 7 ஆம் இடத்திலும் உள்ளனர். சூரியன் 2 ஆம் இடத்திலும், சுக்கிரன் 10 ஆம் இடத்திலும், செவ்வாய் 11 ஆம் இடத்திலும், 3 ஆம் இடத்தில் புதன் என அனைத்துக் கோள்களும் அற்புதமான இடத்தில் உள்ளனர்.

செப்டம்பர் 24 ஆம் தேதிவரை எந்தவொரு தங்கு தடையும் இல்லாமல் எடுத்த காரியங்கள் துலங்கும் மாதமாக இருக்கும். வேலை வாய்ப்புரீதியாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு ஏற்ற மாதமாக இருக்கும்.

மேலும் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த உயர் பதவி, இடமாற்றம், சம்பள உயர்வு என அனைத்தும் கிடைக்கும் மாதமாக இருக்கும். திருமணம் சார்ந்த காரியங்கள் தங்கு தடையின்றி வரன் பார்த்தலில் துவங்கி திருமணம் வரை சுமுகமாக நடக்கப் பெறும்.

குடும்ப வாழ்க்கையில் கணவன் – மனைவி இடையே பெரிய அளவில் பிரச்சினைகள் கிடையாது. கிரகங்களின் பார்வை, கிரகங்களின் சேர்க்கை நற்செய்தியினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும்.

உற்றார் – உறவினர்களின் ஆதரவும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். உடன் பிறப்புகளுக்குள் இருந்த மனக் கசப்புகள் நீங்கி அன்பு பாராட்டும் மாதமாக இருக்கும்.

காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்வோருக்கு ஏற்ற மாதமாக இருக்கும். நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான எண்ணங்களால் மன நிறைவுடன் காணப்படுவீர்கள்.

வெளிநாடுகளில் படிக்க முயற்சிக்கும் மாணவர்களுக்கு அனுகூலமான மாதமாக இருக்கும். வீடு, மனை வாங்குதல் நடக்கப் பெறும்.  பூர்விகச் சொத்துகள் மற்றும் வழக்கு சார்ந்த சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.