கடகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள கடகம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு மாற்றங்களும் ஏற்றங்களும் ஏற்படுகின்ற மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு தனாதிபதியான சூரியன் தன ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு 3,12-ம் இடங்களின் அதிபதியான புதன் சூரியனோடு இணைந்து தன ஸ்தானத்தில் இருக்கும் பொழுது தாராளமான பணவரவு வரக்கூடும். செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசிக்கு ஆட்சி பலத்துடன் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உங்கள் ராசிக்கு 7,8-ம் இடங்களின் அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தியாவதால் இல்லத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த ஈகோ பிரச்சனைகள் விலகும். குரு நான்காம் வீட்டில் தொடர்வதால் பணிகளை உரிய நேரத்தில் முடிக்க முடியாமல் திணறுவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் முகத்தில் பொலிவு கூடும். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் குருவுடன் இணைந்து இருப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படக்கூடும். புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையக்கூடும். திறமை பளிச்சிடும்.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் யோகமான காலமாக அமையக்கூடும். உங்கள் ராசிக்கு யோகமான செவ்வாய் வக்ர நிவர்த்தியாகி ஆட்சி பலமாக இருப்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்த்தபடி கணிசமான லாபம் வரக்கூடும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்று கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு தொழிலில் இழப்புகள் ஏற்படக்கூடும். நன்மையும், தீமையும் சேர்ந்தே நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment