கடகம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

சந்திரனின் இட அமைவு கடக இராசியில் மிகச் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும். செவ்வாய் 11 ஆம் இடத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை இருப்பார், அதுவரையிலான காலகட்டம் ஆதாயம் தரும் காலகட்டமாகும்.

9 ஆம் இடத்தில் குரு, 7 ஆம் இடத்தில் சனி, 3 ஆம் இடத்தில் புதன் என கோள்களின் இட அமைவு உள்ளது. தொழில்ரீதியாக எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும். பணவரவு அதிகரிக்கும்.

வேலைவாய்ப்புரீதியாக இடமாற்றம், பாராட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற விஷயங்களை எதிர்பார்க்கலாம். திருமண சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முடிவுகள் சாதகமானதாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

உடல் நலனைப் பொறுத்தவரை 15 ஆம் தேதி வரையிலான காலம் சிறப்பாக இருந்தாலும், 16 ஆம் தேதிக்குப் பின் உடல் நலக் கோளாறு ஏற்படும். எலும்பு, வயிறு மற்றும் கழுத்து சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

விரயச் செலவாக வீட்டில் இருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்களில் செலவுகள் ஏற்படும்.

கல்வி நலனைப் பொறுத்தவரை மாணவர்கள் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆர்வம் மிகுந்து காணப்படுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.