கடகம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

கடக ராசியினைப் பொறுத்தவரை குருவின் பார்வை ஆதாயப் பலன்களைக் கொடுக்கும். சனி பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து ஓரளவு நன்மை செய்வார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து ரிஷபத்துக்கு இடம் பெயர்கிறார்.

9 ஆம் இடத்தில் குரு பகவான், 11 ஆம் இடத்தில் செவ்வாய், 5 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் மற்றும் 7 ஆம் இடத்தில் சனி பகவான் என கிரகங்களின் நிலை உள்ளது.

வேலைவாய்ப்புரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகள் கைகொடுக்கும் காலமாக இருக்கும். உயர் பதவி மற்றும் புதிய வேலைக்கு முயற்சிப்போருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிப்போர் தயங்காமல் முயற்சிக்கலாம்.

தொழில்ரீதியாக எடுக்கும் புது முடிவுகள் வெற்றிக்கு இட்டுச் செல்லும். பண வரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். அசையாச் சொத்துகள் வாங்கும் காலகட்டமாக இருக்கும், வண்டி, வாகனங்கள் வாங்க நினைப்போரின் எண்ணம் நடந்தேறும்.

திருமண காரியங்களை நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் கைகூடும் காலமாக இருக்கும். திருமண வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். குழந்தைப் பாக்கியத்திற்காக முயற்சிப்போருக்கு நற் செய்தி கிடைக்கும் காலமாக இருக்கும்.

மாணவர்கள் கல்விரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள். வீடு கட்ட நினைப்போர் அஸ்திவாரம் போடும் அளவு செல்லும் வாய்ப்பு உண்டு.

எடுக்கும் முடிவுகளை தயங்காமல் எடுங்கள்; வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துடன் சுப பயணங்களை மேற்கொள்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.