கடகம் மே மாத ராசி பலன் 2023!

கடக ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 10 ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 8 ஆம் இடத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை தானாகவே நடக்கும் மாற்றங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முயற்சியுங்கள்; ஆனால் எந்தவொரு புது முயற்சியினையும் செய்ய வேண்டாம்.

அதேபோல் தொழில்ரீதியாகவும் புதுத் தொழில் துவங்குதல், அபிவிருத்தி என எதையும் செய்யாதீர்கள். புது முயற்சிகள் செய்யும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுதல் நல்லது.

பணவரவு சிறப்பாக இருக்கும்; ஆனால் செலவானது கைக்குள் அடங்காமல் கையைவிட்டு மீறிச் சென்றுவிடும். மாணவர்களைப் பொறுத்தவரை தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள். ஆனால் அவ்வப்போது நண்பர்களால் கவனச் சிதறல்கள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேலும் உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முடிவுகளில் அனைவரின் ஆலோசனையும் கேட்காமல் முன் அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டுச் செயல்படுதல் வேண்டும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தற்போதைக்கு ஜாதகத்தைத் தூக்கி ஓரமாக வைக்கவும். தற்போதைக்கு வரன் பார்க்கும் முயற்சிகளில் தடங்கல்கள், பிரச்சினைகள் ஏற்படும்.

காதலர்கள் மத்தியிலான உறவில் விரிசல் ஏற்படும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு வாக்குவாதங்களும் பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வண்டி, வாகனங்களில் வெகு தூரப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்கள்மீதான பொறுப்புகள் அதிகரிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews