கடகம் மாசி மாத ராசி பலன் 2023!

புதன் பகவான் 10 ஆம் இடத்தில் இருந்து மாசி மாத பிற்பாதியில் கும்ப ராசிக்கும், மீன ராசிக்கும் இடப் பெயர்ச்சி செய்யவுள்ளார். சுப காரியங்கள் வீட்டில் நடந்தேறும். இதுவரை தள்ளிப் போன திருமணங்கள் கைகூடும் காலமாக இருக்கும்.

சுக்கிர பகவான் ராசிக்கு 9 ஆம் இடத்திற்குச் சென்று உச்சம் பெறுகிறார். புதிய வீடு வாங்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள், வண்டி, வாகனங்களைப் புதுப்பிக்கும் முடிவுகளை எடுப்பீர்கள்.

இளைய சகோதரரால் ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். ராகு பகவான் வேலைவாய்ப்புரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு என ஏற்றத்தினைக் கொடுப்பார்.

தொழில்ரீதியாக எடுத்துக் கொண்டால் தொழிலை அபிவிருத்தி செய்யவும், புதுத் தொழில் துவங்கவும் எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியம் ரீதியான மருத்துவச் செலவுகள் குறையும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக கவனச் சிதறல்கள் கொண்டு இருப்பர். வெளிநாடு, வெளியூர்ப் பயணங்கள் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் இவை அலைச்சலைக் கொடுக்கும்.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். கணவன்- மனைவி இடையே மூன்றாம் நபர்களின் தலையீட்டால் பிரச்சினைகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews