கடகம் மார்ச் மாத ராசி பலன் 2023!

கடக ராசியினைப் பொறுத்தவரை செவ்வாய் ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைகிறார். 8-ஆம் இடத்தில் சனி பகவான், 12-ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலை தேடுதல், பதவி மாற்றம், வேலை மாற்றம் செய்தல் சார்ந்த விஷயங்களில் சற்று தாமதம் இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்கள், தாமதங்கள் ஏற்படும். எதிர்பார்த்த வரன்கள் தட்டிப் போகும். எடுக்கும் முயற்சிகளில் பூரண திருப்தி இருக்காது. காதலர்கள் மத்தியில் புரிதல் இன்மை, மன வெறுமை போன்ற விஷயங்கள் நடைபெறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே மூன்றாம் நபர்களின் தலையீட்டால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம்ரீதியான உங்களின் அலட்சியங்கள் உடல் உபாதையினை ஏற்படுத்தும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக கவனச் சிதறல்கள் ஏற்படும். மேலும் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே சிறப்பான மதிப்பெண்கள் பெற முடியும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.