Astrology
கடகம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!
அன்புள்ள கடகம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் திடீர் திருப்பங்கள் ஏற்படும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு யோகக்காரன் செவ்வாய் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் இந்த மாதம் முழுவதும் புதிய பாதை புலப்படும். திட்டமிடாமல் செய்கின்ற காரியங்கள் கூட எளிதில் வெற்றி பெறும். செவ்வாய் பலம் பெற்று இருப்பதால் புதிய முதலீடு செய்வீர்கள். ஜென்மத்தில் இருக்கும் கடக ராகு உங்களுக்கு பெரியளவில் பாதிப்புகளை உண்டாக்காது. ஏழாம் இடத்தில் இருக்கும் கேதுவால் அவ்வப்பொழுது கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையக்கூடும்.
சர்ப்ப தோஷம் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும் அதே சமயம் ஒரு சில நேரத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். பயணங்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படக்கூடும். வாகனத்தை இயக்கும் பொழுதும், நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அர்த்தாஷ்டம குருவினால் ஆரோக்கியத்தில் அவ்வப்பொழுது மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும். ஆறாம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் கடக ராசியினருக்கு எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும்.
மாத தொடக்கத்தில் சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும்போது சுப விரயங்கள் ஏற்படக்கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஜூன் ஒன்பதாம் தேதி சுக்கிரன் உங்கள் ராசியில் வருவதால் தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவியால் இல்லத்தில் நல்லது நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது.
