கடகம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

6 ஆம் இடத்தில் புதன், 9 ஆம் இடத்தில் குரு பகவான், 8 ஆம் இடத்தில் சனி பகவான் எனக் கோள்களின் இட அமைவு உள்ளது. சுக்கிரன் 7 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி அடைகிறார்.

எடுக்கும் புது முயற்சிகளில் கவனத்துடன் செயல்படுதல் நல்லது. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலைக்கு முயற்சிப்போருக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும்.

தொழில் ரீதியாக தெரியாத தொழில் எதையும் துவக்காமல் இருத்தல் நல்லது. திருமண காரியங்களைப் பொறுத்தவரை சுக்கிரன்- சனி பகவானின் இடப் பெயர்ச்சியால் வாழ்க்கைத் துணையின் ஜாதக பலன் கூடி வந்தால் திருமணம் கைகூடி வர வாய்ப்புகள் உண்டு.

காதலர்கள் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துப் பொறுமையுடன் செயல்படுதல் நல்லது. உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை அலட்சியம் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் வேலை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும், வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது முயற்சிகள் செய்யும்போது தயக்கத்துடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் மனக் குழப்பம் நிறைந்து காணப்படுவார்கள்.

அனைத்துக் கோள்களும் சாதகப் பலன்களைக் கொடுத்தாலும் சனி பகவானின் இடப் பெயர்ச்சியால் சிறு சிறு தொந்தரவுகள், தடங்கல்கள், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.