கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

புதன்-சுக்கிரன்-சூர்யன் 6 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி செய்கின்றனர். செவ்வாய் பகவான் 11 ஆம் இடத்தில் வக்ர நிலையில் உள்ளார், 9 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்க, 7 ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார்.

6 ஆம் இடத்தில் கேது பகவான், 10 ஆம் இடத்தில் ராகு பகவான் எனக் கோள்களின் இட அமைவு உள்ளது. வேலைவாய்ப்புரீதியாக செவ்வாய் வக்ரநிலையில் இருப்பதால் மேல் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும்.

புதிய வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்தல் நல்லது. தேவையில்லாத பயம் ஏற்படும். தொழில்ரீதியாக நஷ்டங்கள் பெரிதளவில் இருக்காது, எனினும் அபிவிருத்தி சார்ந்த முடிவுகளைத் தற்போதைக்குத் தள்ளிப் போடவும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் கணவன்- மனைவி இருவரும் எதிரிகள் போல் செயல்படுவார்கள். எதிர்பார்ப்புகள் நடக்காமல் போக, மன வெறுமையுடன் காணப்படுவீர்கள்.

கணவன்- மனைவி இடையே எப்போது பிரிவோம் என்பது போன்ற மன நிலையுடன் காணப்படுவார்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன்கள் கைகூடும். மாணவர்கள் நண்பர்களின் சேர்க்கையால் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக சிறு சிறு தொல்லைகள் ஏற்படும், இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை சனி பகவானின் பார்வையால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.