கடகம் சித்திரை மாத ராசி பலன் 2023!

கடக ராசியினைப் பொறுத்தவரை செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்குள வரவுள்ளார். செவ்வாய் நீச்ச ஸ்தானம் அடைகிறார். குரு பகவான் 9 ஆம் வீட்டைவிட்டு 10 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி ராகு பகவானுடன் இணைகிறார்.

சனி பகவான் 8 ஆம் இடத்தில் உள்ளார். குரு சண்டாள யோகத்தினை சனி பகவான் தடுக்கிறார். அதாவது உங்களுக்குச் சாதகமாக நடக்கவிருந்த விஷயங்களும் சனி பகவானால் தடைபட்டுப் போகும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாமல் இருத்தல் வேண்டும்; இல்லையேல் இது பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும். குடும்பத்தில் நிலவும் சூழ்நிலைகள் நிம்மதியினை ஏற்படுத்தாது, கணவன்- மனைவி இடையே பிரிவு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் இருக்கும்; வீண் பேச்சுகளைத் தவிர்த்தல் நல்லது.

வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் மனக் கசப்புகள் ஏற்படும். மேல் அதிகாரிகளுடன் முரண்பாடுடைய கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்கவும்.

குழந்தைகளின் ஆரோக்கியம்ரீதியாக மனக் கஷ்டம் ஏற்படும், குழந்தைகள் படிப்பு ரீதியாக மந்தநிலையுடன் இருப்பர். வியாபாரம்ரீதியாக வீண் விரயச் செலவுகள் ஏற்படும்; புது முதலீடுகள், அபிவிருத்தி என்பது போன்ற விஷயங்களைத் தள்ளிப் போடவும்.

குல தெய்வ வழிபாடு மட்டுமே உங்களுக்கு ஏற்படும் சங்கடங்களில் இருந்து விடுபட வழி கொடுக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews