கடகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

கடக ராசியினைப் பொறுத்தவரை ஏப்ரல் மாத இரண்டாம் பாதியில் குரு பகவான் – சூர்யன் – புதன் என கோள்களின் கூட்டணி 10ஆம் இடத்தில் அமைகின்றது. 10ஆம் இடத்தில் சூர்யன் உச்சம் அடைந்துள்ளார்.

8ஆம் இடத்தில் சனி பகவான், 12ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இட அமர்வு செய்துள்ளனர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு மாறான மாற்றங்கள் நடக்கும். அதனை ஏற்றுக் கொள்வது நல்லது.

தொழில்ரீதியாக எடுக்கும் முடிவுகளில் பொறுமை தேவை, புது முயற்சி என்று எந்தவொரு ரிஸ்க்கையும் எடுக்காமல் இருத்தல் நல்லது. திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்களைத் தேர்வு செய்வதில் குழப்பம் நிறைந்து காணப்படுவீர்கள்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை சுமாரானதாக இருக்கும், சனி பகவானால் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் / பிரச்சினைகள் ஏற்படும்.

நடக்கும் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே நகர்ந்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை புதிதாகப் பிரச்சினைகள் எதுவும் வராது; ஏற்கனவே இருக்கும் உடல் தொந்தரவுகளும் சரியாகும்.

கல்வி சார்ந்த வங்கிக் கடன்கள் கிடைத்தல் , சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைத்தல் என்பது போன்ற விஷயங்களில் இழுபறி இருக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பம் சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் ரீதியான உறவினர்களின் தலையீட்டால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

எதிர்பார்த்தது நடக்காவிட்டாலும் நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews