கடகம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

குரு பகவான் மற்றும் சனி பகவானின் பார்வை உங்கள் மீது உள்ளது. சொல்லாமல் செய்யும் காரியங்கள் வெற்றிக்கு இட்டுச் செல்லும். ராசிக்கு 4 ஆம் இடத்தில் சூர்யன் நீச்சம் பெற்றுள்ளார், தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தாயுடன் மன ரீதியான கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

தொழில்துறை ரீதியாகவும் கவனத்துடன் செயல்படுதல் நல்லது, பணவசூலில் சிக்கல் இருக்கும். இராசிக்கு 3 ஆம் இடத்தில் புதன் உள்ளார். புத்திசாலித்துடன் செயல்பட்டு புகழினை அடைவீர்கள்.

ராசிக்கு 4 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், கேது ஆகிய கிரகங்களின் இட அமைவு பல அனுகூலங்களைக் கொடுக்கும். மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதற்கான பலனைப் பெற முடியும்.

இராசிக்கு 5 ஆம் இடத்தில் செவ்வாய் விரய ஸ்தானத்தில் உள்ளார். இதனால் பூர்விக சொத்துகள் ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் உடல்நலனில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டு அதனால் செலவினங்கள் ஏற்படும்.

ராசிக்கு 9 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார், எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலோடு செயல்படுவீர்கள். வேலைவாய்ப்புரீதியாக முயற்சிப்பவருக்கு கைமேல் பலன் என்பதுபோல் நிச்சயம் எப்படிப்பட்ட வேலையும் கிட்டும்.

ராசிக்கு 7 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் மனைவியின் உடல் நலனில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தும். தந்தைரீதியான உறவுகளில் உதவிகள் கிடைக்கப் பெறும். ராசிக்கு 10 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ள நிலையில் பலருக்கும் வெளிநாட்டு வேலைகள் கிடைக்கப் பெறும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment