கடகம் ஆவணி மாத ராசி பலன் 2022!

காது, மூக்கு, தொண்டை, சளித் தொல்லை போன்றவற்றால் அவதியுறும் நிலை ஏற்படும், உடல் நலனில் கவனமுடன் இருத்தல் நல்லது. மனதில் இருந்த நீங்காத பாரங்களும், குறைகளும் மறையும்.

உத்தியோகம் ரீதியாக ஏற்றங்களை எதிர்பார்க்கலாம். வாக்குதானஸ்தனத்தில் கோபதாபங்கள் வேண்டாம், தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, பூர்விக சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.

சுபகாரியங்களில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தடைகள் சரியாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த மனக் குறைகள் சரியாகும்.

கணவன் – மனைவி இடையே வாக்குவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. எதிலும் நிதானமாகச் செயல்படும் தன்மை கொண்ட நீங்கள் அதிக நேர்த்தியுடன் செயல்பட வேண்டாம்.

உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். நரசிம்மர் வழிபாடு, அனுமான் வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். உங்களுடைய குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையீடு கூடாது.

அதேபோல் அடுத்தவர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையீடு செய்தல் கூடாது. வண்டி, வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலும் வீடு, மனை சார்ந்த உங்களுடைய கனவு நிறைவேறும் மாதமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.