கடகம் ஆடி மாத ராசி பலன் 2022!

சூரியன் குரு ஸ்தானம் பெற்றுள்ளதால் எண்ணங்களில் தெளிவு பிறக்கும். இதுவரை தோல்விகள், கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வருபவர்களுக்கு விடிவு கிடைக்கும் காலமாக இருக்கும்.

கொடுக்கல் வாங்கலில் பல பிரச்சினைகளை கடந்த காலங்களில் சந்தித்த பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள். புதன்- சூரியன் இணைவு சுய தொழில் இதுவரை இருந்த மந்தநிலையினைச் சீர் செய்து சிறப்பான நிலைக்கு உந்தித் தள்ளும்.

பெற்றோர் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை; விரயச் செலவுகள் மருத்துவ ரீதியாக ஏற்படும். புதிதாகத் தொழில் துவங்க நினைப்போருக்கும் தொழிலை விரிவுபடுத்த நினைப்போருக்குமான காலம் இது.

வேலைவாய்ப்பு ரீதியாக இதுவரை சந்தித்து வந்த பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள். வேலைவாய்ப்பின்மையால் தவித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சுபகாரியங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. திருமணம் சார்ந்த விஷயங்கள் தானாகவே தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். புதுமணத் தம்பதிகளிடையே மனக் கசப்புகள் ஏற்படும். கணவன்- மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்தல் வேண்டும்.

பிரிந்து இருக்கும் கணவன் – மனைவி இடையே இருக்கும் மனக் கசப்புகள் சரியாகும், நிதானமாகச் செயல்படுதல் வேண்டும். பூர்விக சொத்துகள் சார்ந்த பிரச்சினைகளை தள்ளிப் போடுதல் வேண்டும்.

காலபைரவர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்தல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews