Connect with us

கடகம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

Rasipalan

கடகம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கடகம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம்  நன்மைகள் ஏற்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. இந்த ஆடி மாத தொடக்கத்தில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பார். ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு பிறகு சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரித்தாலும் நன்மை தான் செய்வார். உங்கள் ராசியில் புதன், சூரியன், ராகு இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. புதிய காரியங்கள் செய்யும் பொழுது குறுக்கீடு அதிகரிக்கும். நினைத்த படி செய்ய முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள்.

உங்கள் ராசிக்கு யோகக்காரரான செவ்வாய் வக்ரமடைந்து கேதுவுடன் இருப்பதால் எதிலும் தீர யோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும். உங்கள் ராசிக்கு குரு அர்த்தாஷ்டம இடத்தில் வக்ர நிவர்த்தி ஆகி இருப்பதால், எவ்வித நற்பலன்களை தர இயலாது. உங்கள் ராசிக்கு சனி பகவான் 6-ம் இடத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். பகைவர்களின் சதிகளை  முறியடைத்து அவர்களை சமாளிக்கும் ஆற்றலை கொடுப்பார். இரண்டு பலம்பெற்ற கிரகங்கள் வக்ரம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆடி மாதம் சில தடுமாற்றங்கள், மனம் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ராசியில் புதன், ராகுவுடன் இணைந்து இருப்பதால் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். இல்லத்தில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுக்கிரனால் மாத முற்பகுதியில் பொருளாதாரம் மேம்படும். இந்த மாதம் ஏற்றமும்  இறக்கமுமாக இருக்கும். ஒரு சில நேரத்தில் வருகின்ற நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டு வருத்தப்படுவீர்கள். உங்கள் தனாதிபதி சூரியன் ராகுவோடு இணைந்து இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். தனவரவு சீராக வந்தாலும் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top