கச்சத்தீவு திருவிழா: க்ரீன் சிக்னல் காட்டிய இலங்கை அரசு!!

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பிரதேசமான கச்சத்தீவில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக தமிழ்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயப் பெருவிழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

இவற்றின் மூலம் தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு மூலமாகவும் இலங்கை அமைச்சருடன் பேச வைத்தபோது கச்சத்தீவில் நடக்கும் திருவிழாவிற்கு தமிழக மீனவர்கள் வர  இலங்கை  அரசு அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், கச்சத்தீவு திருவிழாவில் இந்திய தமிழர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment