காத்துவாக்குல ரெண்டு காதல்: இன்று ஒரே நாளில் வெளியான மூன்று போஸ்டர்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் மூன்று போஸ்டர்கள் இன்று ஒரே நாளில் வெளியாகி உள்ள நிலையில் அந்த மூன்று போஸ்டர்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், இந்த படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்த படத்தின் விஜய் சேதுபதி கேரக்டர் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அவர் ராம்போ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் சமந்தா, காதீஜா என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் நயன்தாரா கண்மணி என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் அடுத்தடுத்து 2 போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று போஸ்டர்களும் தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனிருத் இசையில் செவன் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment