
பொழுதுபோக்கு
கார்த்தியின் படத்தை பல கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம்! நடிக்காத படத்துக்கு இத்தனை விலையா?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் கார்த்தி, இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது, தற்போழுது கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
விருமன் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வன்னன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.அடுத்ததாக செப்டம்பர் 30ம்தேதி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இதன்பின் தீபாவளியையொட்டி கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகிறது.
இயக்குனர் மித்ரன் இயக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.
அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கார்த்தி மேலும் பல புது இயக்குனர்களுடன் இணையயுள்ளார், இந்நிலையில் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கயுள்ளபடம் ஜப்பான், ஆனால் இந்த படத்தை குறித்த எந்த அதிகார பூர்வ அறிவிப்பும் தற்போழுது வரை வரவில்லை, படத்தின் படபிடிப்பு கூட தொடங்கவில்லை என்பது தான் உண்மை.
லேடி சூப்பர் ஸ்டாரின் 20 வயது கியூட்டான புகைப்படம்! மிஸ் பண்ணாம பாருங்க!

மேலும் கார்த்தியின் ஜப்பான் படம் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும் தவறினால் 2024 பொங்கலுக்கு வெளியாக தயாரியாகிவிடும் என கூறப்படுகிறது.
