காரணமின்றி பய உணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?! அப்ப இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க – தினம் ஒரு மந்திரம்

என்னதான் கல்வி, சொத்து, பதவி என இருந்தாலும் ஒருவன் கோழையாய் இருந்துவிட்டால் எதையும் தற்காத்து வைத்துக்கொள்ள முடியாது. மனிதனுக்கு வீரத்தை தருவது அஷ்டலட்சுமியில் ஒருவளான வீரலட்சுமியாகும். இவள் பராசக்தியின் அம்சமும்கூட… இவளை வணங்குவதால் தைரியம் பிறக்கும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். காரணமின்றி பய உணர்ச்சியால் அவதிப்படுவர்கள் மன உளைச்சல் நீங்கும்..

அஷ்டலட்சுமி ஸ்லோகம்…

அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா
அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே

பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.

வெள்ளி, செவ்வாயில் வீரலட்சுமியை சிவப்பு நிற மலர்களை கொண்டு வணங்கிவர தைரியம் பிறக்கும். எதையும் எதிர்கொள்Lum dhuNissal undaakum.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.