சுற்றுலா பயணிகளை காணாமல் கொண்டாடப்படவிருக்கும் காணும் பொங்கல்! வெறிச்சோடிய நிலையில் அருவிகள்!!

பொதுவாக பொங்கல் நாள் என்றாலே மக்கள் அனைவரும் மிகுந்த கொண்டாடுவதற்கு காணப்படுவர். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை, மாறாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நாம் காணும் பொங்கல் அன்று மக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் காணும் பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காணும் பொங்கல் அன்று சுற்றுலாத்தலங்கள், கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக குற்றால அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதன்படி கொரோனா பரவலை தடுக்கும் வகையில் குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.

அதன்படி குற்றாலம் மெயின் அருவி, தேனருவி, ஐந்தருவி, பாலருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி நிலைமையில் உள்ளது. இதனால் சுற்றுலா தலங்களை நம்பியுள்ள வியாபாரிகளின் தொழில் முடக்கம் ஆனது தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment