Entertainment
‘காலா’வின் பக்கத்தில் கூட நெருங்க முடியாத ‘ஜூராஸிக் வேர்ல்ட்’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் வெளியாகிறது என்றால் எந்த படமும் அன்றைய தினத்தில் வெளியாகாது என்பது கடந்த பல வருடங்களாக நடந்து வரும் நிகழ்வு. ஆனால் கடந்த 7ஆம் தேதி ‘காலா’ வெளியான அன்று ஹாலிவுட் திரைப்படமான ‘ஜூராஸிக் வேர்ல்ட்’ ரிலீஸ் ஆனது.
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி பெரும் வசூலை வாரிக்குவித்து வரும் ஜூராஸிக் வேர்ல்ட் படத்தின் சென்னை வசூல், ‘காலா’ வசூலை நெருங்கக்கூட முடியாத நிலையில் உள்ளது. ஜூன் 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் காலா திரைப்படம் சென்னையில் ரூ.6 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்துள்ள நிலையில் இதே நான்கு நாட்களில் ஜூராஸிக் வேர்ல்ட் திரைப்படம் வெறும் ரூ.64 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.
மேலும் காலா’ படத்திற்கு இன்னும் குடும்ப ஆடியன்ஸ்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் மிக விரைவில் சென்னையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை தக்க வைத்திருக்கும் ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
