படத்தின் வெற்றி விழா நாளில் ரீல் ஜோடிகள் எடுத்த முடிவு.. பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கல்யாணம்..

பிரபல நகைச்சுவை நடிகர் தங்கவேலுடன் சுமார் 50 படங்களுக்கும் மேல் சேர்ந்து நடித்தவர் எம். சரோஜா. இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடந்த நேரம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தருணமாகும். நடிகை எம் சரோஜா சென்னையை சேர்ந்தவர். இவர் இயக்குனர் கே சுப்பிரமணியம் என்பவரால் தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் நடித்த ’சர்வாதிகாரி’ என்ற திரைப்படத்தில் எம். சரோஜா அறிமுகமான போது அவருக்கு வெறும் 14 வயது தான்

இதன் பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என சுமார் 300 படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்களில் அவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தார். அந்த வகையில், நகைச்சுவை நடிகர் கே. தங்கவேலுடன் இவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளார். அதில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கல்யாணப்பரிசு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

m saroja1

’கல்யாணப்பரிசு’ படம் முழுக்க முழுக்க சோகமயமான கதை கொண்டதாக இருக்கும் என்பதால் தங்கவேலு, எம் சரோஜா காமெடி தான் அவ்வப்போது வந்து ரசிகர்களை சிரிக்க வைக்கும். இந்த படத்தில் தங்கவேலு தனது மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக் கொள்ளும் காட்சிகள் எல்லாமே விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருக்கும்.

நடிகர் தங்கவேலு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில் 50 படங்களுக்கு மேல் உடன் நடித்த எம் சரோஜாவையும் அவர் காதலித்தார். இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அந்த வகையில் மதுரையில் நடந்த கல்யாணப்பரிசு படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இருவரும் மதுரை முருகன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் தற்போது நடித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

300 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த எம் சரோஜா, எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பு சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

நடிகை எம் சரோஜா கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். அப்போது அவருக்கு வயது 79. தமிழ் திரை உலகமே திரண்டு அவரது இறுதிச்சடங்கை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எம் சரோஜா மறைந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் அவரது திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதெல்லாம் அவரது நடிப்பை ரசிக்காத ரசிகர்களே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...