Connect with us

கே.எஸ்.சேதுமாதவன் சினிமாவின் ஊற்றுமுகம்!: நடிகர் கமல்ஹாசனின் இரங்கல் ட்விட்;

சேதுமாதவன் கமலஹாசன்

Entertainment

கே.எஸ்.சேதுமாதவன் சினிமாவின் ஊற்றுமுகம்!: நடிகர் கமல்ஹாசனின் இரங்கல் ட்விட்;

கே.எஸ்.சேதுமாதவன் சினிமாவின் ஊற்றுமுகம்!: நடிகர் கமல்ஹாசனின் இரங்கல் ட்விட்;

காலம் காலமாக பேசப்படும் படத்திற்கு அச்சாரமாக காணப்படுபவர் இயக்குனராவர். இயக்குனரின் ஒவ்வொரு கடின உழைப்பும் நடிகர்-நடிகைகளுக்கு பெயர்களை பெற்றுத்தரும். அத்தகைய திறமை கொண்ட இயக்குனர்தான் சேதுமாதவன்.

சேதுமாதவன்

இவர் தனது சினிமா வாழ்க்கையில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் கே. எஸ். சேதுமாதவன் தற்போது காலமானார். அவருக்கு வயது 90 ஆகும். மறைந்த திரைப்பட இயக்குனர்  சேது மாதவனுக்கு நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காலத்தால் அழியாத காவியங்கள் படைத்த சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம் என்று கமல் கூறியுள்ளார். சேதுமாதவன் மலையாள சினிமாவின் தரத்தை தீர்மானித்த அடிப்படை விசைகள் ஒருவர் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.

தன் கலை சாதனைகளால் இயக்குனர் சேதுமாதவன் என்றென்றும் நினைவு கூறப்படுவார் என்றும் கமலஹாசன் ட்விட்டர் வாயிலில் கூறியுள்ளார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் என்று கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் கமலை கொண்டு நம்மவர் என்ற திரைப்படத்தினை சேதுராமன் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top