Connect with us

ஒற்றை தலைமை வரவேண்டும்-துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி!

k.b.munusamy

Tamil Nadu

ஒற்றை தலைமை வரவேண்டும்-துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி!

பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் ஆரவாரமாக தற்போது தொடங்கியது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் மேடையில் அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் வரிசையாக வந்து தங்களது விருப்பங்களையும் தீர்மானங்களையும் பற்றி பேசிக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை நிராகரித்து விட்டதாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டனர் என்று கே.பி.முனுசாமி கூறினார். ஒற்றை தலைமை வரவேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர் என்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறினார்.

ஒற்றை தலைமை தீர்மானத்தோடு இணைந்து அனைத்து தீர்மானங்களும் பின்னர் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தீர்மானம் எப்போது வருகிறதோ அப்போதுதான் இருபத்திமூன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top