Connect with us

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!!!

airport mumbai 022519

செய்திகள்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை!!!

டெல்லியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் விமானி பயிற்சி பள்ளி அமைப்பது குறித்து கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் விமானத்தில் செல்லும் பயணிகளின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் விமான பயணிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை அருகே இரண்டாவது விமானநிலையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமானம் அமைப்பதற்கு சாத்தியமான இடத்தை தேர்வுசெய்வதற்கான பணியானது தொழில்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானநிலையம் அமைப்பதற்கு தமிழகத்தில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை சந்தித்து இறுதிகட்ட முடிவை எடுக்க ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய சந்திப்பினால் தமிழகத்தில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top