
பொழுதுபோக்கு
ஸ்கூல் பொண்ணாக மாறிய ஜோதிகா! யூனிஃபாமில் இருக்கும் கியூட் புகைப்படம்!
தமிழின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா, இவர் டாப் நடிகர்களான ரஜினி ,கமல் ,விஜய்,அஜித் , விக்ரம் ,சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கலக்கியுள்ளார். தமிழ் ரசிகர்களின் கனவு கனியாக வளம் வந்த இவர் செப்டம்பர் 11-ம் தேதி நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பின் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர் இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்துள்ளார்.
கோடம்பாக்க நட்சத்திர ஜோடிகள் என்றால் அஜித் ஷாலினிக்கு பிறகு நமக்கு நினைவுக்கு வரும் ஒரு பெயர் சூர்யா ஜோதிகா தான். அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். கடந்த வருடத்தில் ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார்.
இணைந்த சில நாட்களில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பெற்று முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
நடிகர் விஜய் – னா சும்மாவா! எவ்வளோ மாஸான என்ட்ரி பாருங்க..
இந்நிலையில், பள்ளி சீருடை அணிந்த இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன டிரஸ் செய்து ஸ்கூல் பசங்க மாதிரி இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
