டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தேர்தலுக்கு ஒரு நியாயம்;தேர்வுக்கு ஒரு நியாயமா? விசாரணையை வேரில் இருந்து தொடங்குங்கள்!

நம் இந்தியாவில்  ஊழல் என்ற பேச்சுவார்த்தை அதிகரித்துள்ளது. அவை உணவு பொருட்கள் தொடங்கி படிப்பு வரை அனைத்திலும் உள்ள நிகழ்கிறது. தமிழகத்திலும் இந்த ஊழல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குரூப் 4 எக்ஸாம் இல் முறைகேடு குறித்து ஹைகோர்ட் சில கருத்துக்களை கூறியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான நிகழ்வு என்று ஹை கோர்ட் நீதிமன்றம் கூறியுள்ளது. முறைகேடு பிரச்சினையால் தேர்தல் ரத்தாகும் போது, தேர்வு மட்டும் ரத்த செய்யப்படாதது ஏன்? என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஏடிஎம் மையங்களில் பணம்  நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.ஆனால் பல லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான விடைத்தாள்களுக்கு போதிய பாதுகாப்பு தராதது ஏன்? என்றும் கேள்வி கேட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றம்

தமிழகத்தின் வெவ்வேறு பகுதியினர் சரியாக 2 தேர்வு மையங்களில் தேர்வு செய்தது எப்படி? என்றும் ஹை கோர்ட் நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர். குரூப் 4 முறைகேடு மிகவும் மோசடி என்றும் இதற்கான விசாரணையை வேரில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டுவரும் வகையில் உரிய நடவடிக்கை தேவை என்றும் அது ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சரியான பொறுப்புகளில் சரியான,நேர்மையான நபர்களை நியமிக்கும் போது தவறுகள் தவிர்க்கப்படும் என்றும் ஹைகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print