சும்மா எதுக்கு இப்படி ட்ராமா பண்ற? நீ கேப்டனாக நினைச்சது குத்தமா பாலா…..
வெளியாகி ஒரு வாரம் கூட நிறைவு பெறாத நிலையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் அல்டிமேட். அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பிக் பாஸ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் அடுத்த வார தலைவருக்கான போட்டியை அறிவித்து இருந்தது. இதில் பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவர் மட்டுமே தலைவராக தகுதி உள்ளதாக தேர்வாகி உள்ளனர்.
இவர்கள் இருவரையும் மரத்தாலான நாற்காலியில் அமர வைத்து அந்த நாற்காலியில் நீண்ட கட்டைகள் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டியாளர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்களின் நாற்காலியை தரையில் படாதபடி தூக்கி சுமக்க வேண்டும் என்பதுதான் இந்த டாஸ்க்.
இதில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிகளவு ஹவுஸ் மெட்டுகள் சப்போர்ட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பாலாஜி முருகதாஸ் நாற்காலியோடு தூக்குவதற்கு மீதமுள்ள ஹவுஸ் மெட்டுகள் திணறுகின்றனர்.
இதனை அறிந்த பாலாஜி முருகதாஸ் டாஸ்க் தொடங்கிய சில வினாடிகளிலேயே நாற்காலியிலிருந்து குதித்து விட்டார். இதற்கு ஜூலி பாலாஜியிடம் கேட்கும்போதே எதற்கு இப்படி டிராமா பண்ணுகிறாய் என்று பாலாஜியிடம் கேட்கிறார்.
இதனால் பாலாஜி கேப்டனாக வேண்டும் என்று ஜூலி நினைத்ததற்கு இப்படி ஒரு பரிசு கிடைத்ததாக நெட்டிசன்கள் இணையதளத்தில் கலாய்த்துக் கொண்டு வருகின்றனர்.
