Connect with us

இதைமட்டும் செய்தால் போதும்: கோடையை எளிதாக சமாளிக்கலாம்…..

Summer

தமிழகம்

இதைமட்டும் செய்தால் போதும்: கோடையை எளிதாக சமாளிக்கலாம்…..

இதைமட்டும் செய்தால் போதும்: கோடையை எளிதாக சமாளிக்கலாம்…..

கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்கவும், உடலை குளுமையாக  வைத்திருப்பது  எப்படி என்ற கேள்வி அனைவர் இடத்திலும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கோடைகாலத்தில் சமவெளிப் பகுதியில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாகவும், மலைப்பிரதேச பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாக இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எளிது தான். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். பொதுவாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கோடை வெயில் அதிகமாக இருக்கும்.

இந்த சமயத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீட்டிலேயே இருப்பது நல்லது. எவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்க முடியுமோ குடியுங்கள். வீட்டில் தயாரிக்கப்படும் மோர், பழைய கஞ்சி நீர், இளநீர், எலுமிச்சை பழச்சாறு குடிப்பது உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

அதனைத் தொடர்ந்து முந்தையநாள் எஞ்சிய உணவை அடுத்த நாள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மெலிதான காட்டன் உடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும் போது கண்ணாடி, குடை, தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்து கொள்ளுங்கள்.

மது, தேநீர், காபி, கார்போனைட்டர் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிருங்கள். இந்த பானங்கள் உங்கள் உடலின் நீர் இழப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் குளிர்ந்த நீரில் மூன்று அல்லது நான்கு முறை நாளொன்றுக்கு குளிக்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top