வெறும் 3 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்! களைகட்டிய தீபாவளி சேல்ஸ்!

ஆட்டுச்சந்தை

தமிழகத்தில் வருகின்ற நாலாம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளி ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி அன்று இறைச்சி கடைகள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆடு

இந்நிலையில் இன்றைய தினம் மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுச்சந்தையில் வியாபாரிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். ஏனென்றால் அங்கு வெறும் 3 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் மேலூர் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் இன்று களைகட்டியது என்று அங்குள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் ஆடு, கோழிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகவும் வியாபாரிகள் கூறினர்.

வழக்கமாக ஒரு ஆடு 5 ஆயிரம் ரூபாய் வரை தான் விற்பனை செய்யப்படும் .ஆனால் தீபாவளி நெருங்கியதால் இன்றைய தினம் ஆடு ஒன்று 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை  விற்பனை செய்ததால் வியாபாரிகள் முகத்தில் சந்தோஷம் நிலவியது.

வந்த வியாபாரிகளும் விற்பனை செய்த விவசாயிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் வந்து செல்வதாகவும் அங்கு கூறுகின்றனர். இதனால் அங்குள்ள அனைவர் மத்தியிலும் சந்தோசம் நிலவுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print