இளநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் : பல கட்சிகள் ஆதரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி சென்னை பள்ளி கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 24,000 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி வழங்கப்பட்டது.

ஆனால் மேலும் 20000 பேருக்கு பணி வழங்கவில்லை எனக் கூறி சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் இளநிலை ஆசிரியர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலனாகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் போராடிவரும் இளநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கூறினார், அவர்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வருகிறது.

நாளை கரையை கடக்கிறது மோக்கா புயல்.. எங்கெல்லாம் மழை பெய்யும்?

ஆசிரியர்களின் கோரிக்கையை 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்றாவிடில் அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா வரும் 15ஆம் தேதி போராட்டத்தை கையில் எடுக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன் வரவேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.