
தமிழகம்
#Breaking அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு!
அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சோழீஸ்வரர் ஆலயம் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு மாமன்னர் ராஜேந்திர சோழன் கடாரம் வரை வென்று சோழனின் ராஜ்யத்தை நிலை நிறுத்தினார்.
இவருடைய பிறந்த நாளான ஆடி திருவாதிரை வருகின்ற 26 ஆம் தேதி வருகின்றது. இதனை அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் கடந்தாண்டு அறிவித்தார்.
இந்நிலையில் ஆடி திருவாதிரை அன்று வருகின்ற 26 ஆம் நாள் அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விட்டு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.
மேலும் அதனை ஈடு செய்யும் பொருட்டு அடுத்த மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று முழு வேலை நாள் எனவும் அறிவிக்கு வெளியிட்டுள்ளார்
