12ஆம் தேதி நாகை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!!!

நம் தமிழகத்தில் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துக் கொண்டு வருவார்கள். ஏனென்றால் அந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் திருவிழா அல்லது தேரோட்டம் உள்ளிட்டவை நிகழ்ந்தால் அந்த வட்டார பகுதிகளுக்கு உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படும்.

அந்த வகையில் நாகை மாவட்டத்தில் வருகின்ற 12ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் .

நாகை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்துள்ளார் கலெக்டர் அருண். ஏனென்றால் அங்கு நாகூர் நாகநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற 12ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் நாகை தாலுக்கா பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சியுள்ளனர். மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment