Connect with us

நெல்லையில் ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!!-மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

உள்ளூர் விடுமுறை

தமிழகம்

நெல்லையில் ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!!-மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

நம் தமிழகத்தில் தற்போது தான் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

ஏனென்றால் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தேர் திருவிழாவையொட்டி ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் 4வது சனிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அன்று வேலை நாளாக அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.இதனால் மாணவர்கள் தற்போதே கொண்டாட்டத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top