சென்ட் பாட்டிலை டாய்லெட்டில் போட்ட ஜூலி! ஆத்திரமடைந்த வனிதா; இடையில் ஷாரிக்…..

என்னதான் பிக்பாஸ் 100 நாள் ஓடினாலும் வெறும் ஒரு வாரம் ஓடி பிக்பாஸ் ரசிகர்கள் ஒட்டுமொத்தத்தையும் தன்வசம் இழுத்துக் கொண்ட நிகழ்ச்சியாக காணப்படுகிறது பிக்பாஸ் அல்டிமேட்.

அல்டிமேட் நிகழ்ச்சியில் தினம்தோறும் புதிது புதிதான சுவாரஸ்யமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று பிக்பாஸ் அல்டிமேட்டில் போலீஸ் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும் சண்டை நிகழ்ந்ததாக காணப்படுகிறது. இந்த சண்டை ஜூலிக்கும் வனிதாவுக்கும் இடையே நிகழ்ந்துள்ளது. அதன்படி வனிதாவின் சென்ட் பாட்டிலை ஜூலி டாய்லெட்டில் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வனிதா சீ கேவலமா இல்ல என்று கேட்கிறார். செருப்பால அடிப்பேன் என்பது போல பிஞ்சிரும் என்று கூறியுள்ளார். இதனிடையே ஷாரிக்கும் வனிதாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் உண்டாகி உள்ளது.

அதோடு தனது ரவுடித்தனமான பேச்சை ஒவ்வொரு கணமும் வனிதா பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பதிவு செய்து கொண்டே வருகிறார். தூக்கி எல்லாத்தையும் வீசி எறிந்து விடுவேன் என்று கூறிய வனிதா உங்களுடைய பலத்தை  காண்பிக்க நினைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment